Home இலங்கை பொருளாதாரம் சுற்றுலா வருவாயில் புதிய சாதனை : 1.5 பில்லியன் டொலரை கடந்த இலங்கை

சுற்றுலா வருவாயில் புதிய சாதனை : 1.5 பில்லியன் டொலரை கடந்த இலங்கை

0

2026 ஆம் ஆண்டில் இதுவரை நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை மூலம் நாடு 1.5 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான அந்நிய செலாவணி வருவாயை ஈட்டியுள்ளது என்று சுற்றுலா பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் கலந்துகொண்டபோது பிரதி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்பார்க்கப்படும் இலக்கு

இதுவரை நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கை 1.2 மில்லியனை (1.2 மில்லியன்) நெருங்கியுள்ளது என தெரிவித்துள்ளார்.

இலங்கையின் சுற்றுலாத் துறையில் ஏற்பட்டுள்ள இந்த நேர்மறையான வளர்ச்சியின் மூலம், 2026ஆம் ஆண்டிற்கான 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் வருகை என்ற எதிர்பார்க்கப்படும் இலக்கு எட்டப்படும் என்று பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் புள்ளிவிபரங்களின் பிரகாரம் கடந்த ஜுன் மாதம் வரையான காலப்பகுதிக்குள் 1,146,573 சுற்றுலாப் பயணிகள் மட்டுமே இலங்கைக்கு வருகை தந்துள்ளதுடன், ஜுன் மாதத்தில் சுற்றுலாப் பயணிகள் வருகை 9.9 வீதத்தினால் வீழ்ச்சியடைந்திருந்தமையும் தெரியவந்துள்ளது.  

Source: https://tamilwin.com/article/tourist-arrival-1-2-million-1-5-billion-dollars-1783665487

NO COMMENTS

Exit mobile version