Home இலங்கை பொருளாதாரம் வெளிநாட்டு பணியாளர்களால் நாட்டிற்கு கிடைத்துள்ள டொலர்கள்

வெளிநாட்டு பணியாளர்களால் நாட்டிற்கு கிடைத்துள்ள டொலர்கள்

0

கடந்த ஜூன் மாதத்தில் வெளிநாட்டு பணியாளர்களால் இலங்கைக்கு 635.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அனுப்பப்பட்டுள்ளது.

இதேவேளை 2024ஆம் ஆண்டு ஜூனில் வெளிநாட்டு பணியாளர்களால் 519.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நாட்டிற்கு கிடைத்துள்ளன.

அதிகரிப்பு பதிவு

இதன்படி இவ்வருடம் கிடைத்த பணமானது கடந்த வருடத்தில் கிடைக்கப்பெற்ற பணத்தின் 22 சதவீத அதிகரிப்பாகும் என்று மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், 2025ஆம் ஆண்டு மே மாதத்தில் கிடைத்த 641.7 மில்லியன் அமெரிக்க டொலருடன் ஒப்பிடும்போது, அனுப்பப்பட்ட தொகையானது சற்று குறைந்துள்ளதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

Source: https://tamilwin.com/article/dollars-flowing-into-sri-lanka-foreign-workers-1752294506

NO COMMENTS

Exit mobile version