Home இலங்கை பொருளாதாரம் இலங்கையின் மொத்த கடன் விவரங்கள் வெளியாகின..

இலங்கையின் மொத்த கடன் விவரங்கள் வெளியாகின..

0

அரசாங்கத்தின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன் புள்ளிவிபரங்களை நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க (Shehan Semasinghe) நாடாளுமன்றத்தில் வெளியிட்டுள்ளார்.

பொதுக்கடன் முகாமைத்துவ சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பின் போது அமைச்சர் இந்த புள்ளிவிபரங்களை வெளிப்படுத்தினார்.

அதன்படி, உள்நாட்டு கடன் தொகை டிசம்பர் 31, 2023 இல் ரூ. 17,051 பில்லியனாகவும், ரூ. மார்ச் 31, 2024 இடையில் ரூ.17,252 அதிகரித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு கடன்

இதேவேளை, வெளிநாட்டு கடன் 37 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளதாகவும் அதில் ஏப்ரல் 2022 முதல் 5.5 பில்லியன் டாலர் நிலுவையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

பலதரப்புக் கடனைச் செலுத்தியிருந்தாலும், இருதரப்புக் கடன்களை இன்னும் செலுத்ததன் காரணமாக இவ்வாறு கடன் நிலுவையில் உள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Source: https://ibctamil.com/article/domestic-and-foreign-debt-figures-sri-lanka-1717791630

NO COMMENTS

Exit mobile version