Home உலகம் வெற்றிகரமாக இலக்கை தாக்கிய ஏவுகணை : இந்தியாவின் சாதனை

வெற்றிகரமாக இலக்கை தாக்கிய ஏவுகணை : இந்தியாவின் சாதனை

0

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் (டிஆர்டிஓ) உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட சுதேசி தொழில்நுட்ப க்ரூஸ் ஏவுகணை, ஒடிசா மாநிலம் சந்திப்பூரில் வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது.

இச்சோதனையின் போது, அதன் அனைத்து துணை அமைப்புகளும் எதிர்பார்த்தபடி செயல்பட்டன. பல்வேறு இடங்களில் ஒருங்கிணைந்த சோதனை மையத்தால் நிறுவப்பட்ட ராடர், எலக்ட்ரோ ஆப்டிகல் டிராக்கிங் சிஸ்டம், டெலிமெட்ரி போன்ற பல்வேறு சென்சார்களால் ஏவுகணை செயல்திறன் கண்காணிக்கப்பட்டது.

ரஷ்ய பின்புலத்தில் உக்ரைன் அதிபரை கொல்ல சதி! போலந்து நாட்டவர் அதிரடி கைது

இந்திய விமானப்படையில் இருந்தும் கண்காணிப்பு

இந்திய விமானப்படையின் சுகோய் -30-எம்கே-ஐ விமானத்தில் இருந்தும் ஏவுகணை பறப்பது கண்காணிக்கப்பட்டது.

கனடாவில் அதிகரிக்கப்படவுள்ள அபராதத் தொகை: வெளியான தகவல்

இந்த ஏவுகணையின் சோதனை வெற்றி பெற்றதைத் தொடர்ந்து டி.ஆர்.டி.ஓ. விஞ்ஞானிகள் மற்றும் ஊழியர்களுக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

NO COMMENTS

Exit mobile version