Home உலகம் உலகின் தலைசிறந்த நாடுகள் பட்டியலில் கனடாவுக்கு கிடைத்துள்ள இடம்

உலகின் தலைசிறந்த நாடுகள் பட்டியலில் கனடாவுக்கு கிடைத்துள்ள இடம்

0

உலகின் தலைசிறந்த நாடுகள் பட்டியலில் இரண்டாவது இடத்திலிருந்த கனடா (Canada)  தற்போது நான்காவது இடத்தை பிடித்துள்ளது.

US News & World Report என்னும் அமைப்பு ஆண்டுதோறும் உலகின் தலைசிறந்த நாடுகள் பட்டியலை வெளியிட்டுவருகிறது.

இந்த பட்டியலில் முதலிடத்தை சுவிட்சர்லாந்து (Switzerland) பிடித்துள்ளது.இரண்டாவது இடத்தை ஜப்பானும் (Japan) , மூன்றாவது இடத்தை அமெரிக்காவும் (USA)   நான்காவது இடத்தை கனடாவும் பிடித்துள்ளது.

உலகின் தலைசிறந்த நாடுகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்த கனடா தற்போது நான்காவது இடத்துக்கு கீழிறங்கியுள்ளது.

வெளியான காரணம்

வர்த்தகம் செய்வதற்கான அனுமதி வழங்குதல், பாரம்பரியம் மற்றும் தொழில் முனைவு போன்ற விடயங்களில் குறைவான புள்ளிகளைப் பெற்றதுதான் கனடா தற்போது நான்காவது இடத்துக்கு கீழிறங்கியுள்ளதற்கான காரணம் என கூறப்பட்டுள்ளது.

எனினும், ஆய்வுகளில் கிடைக்கும் முடிவுகளின் அடிப்படையில் மற்ற நாடுகளால் ஒரு நாடு எப்படிப்பட்டது என பார்க்கப்படுகிறது.மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல், சுற்றுலாவுக்கு உகந்த இடம் ஆகிய விடயங்களில் அதிக புள்ளிகளை கனடா பெற்றுள்ளது.

எனவேதான் உலகின் தலைசிறந்த நாடுகள் பட்டியலில் முதல் ஐந்து இடங்களுக்குள் கனடா இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version