Home உலகம் உக்ரைன் – ரஷ்ய போர் பதற்றம்: புடினிடம் ட்ரம்ப் வலியுறுத்திய விடயம்!

உக்ரைன் – ரஷ்ய போர் பதற்றம்: புடினிடம் ட்ரம்ப் வலியுறுத்திய விடயம்!

0

உக்ரைன் உடனான போரை மேலும் தீவிரப்படுத்த வேண்டாம் எனவும் போரை கைவிடுமாறும் ரஷ்ய ஜனாதிபதி புடினை, டொனால்ட் ட்ரம்ப்(Donald Trump) வலியுறுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடனான(Vladimir Putin) தொலைபேசி உரையாடலின் போதே ட்ரம்ப் இதனை தெரிவித்துள்ளார்.

உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது.

உக்ரைன் – ரஷ்யா போர்

அத்துடன், இருநாடுகளுக்கும் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகளும் முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், நடந்துமுடிந்த அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் ட்ரம்ப், தனது தேர்தல் பிரசாரத்தின் போது, தான் வெற்றி பெற்றால் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவேன் என கூறி இருந்தார்.

அதன்படி, தற்போது ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ள நிலையில், அவர் போரை நிறுத்த முயற்சிகள் எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிற
சூழலிலேயே டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி புடினை தொடர்பு கொண்டு உரையாடியுள்ளார்.

இதேவேளை, ட்ரம்புக்கும், புடினுக்கும் இடையே நடைபெற்ற பேச்சு வார்த்தை குறித்து தங்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படவில்லை என்றும், இதனை ஏற்கவோ அல்லது எதிர்க்கவோ முடியாது என உக்ரைனின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version