கனடாவின் பிரம்ரன் நகரில் உள்ள சிறி கற்பக விநாயகர் ஆலயத்தில் கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த ஆலயத்தில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்ற வேளையில் உள்ளே புகுந்த முகமூடியணிந்த கொள்ளையர்கள் உண்டியலை கொள்ளையிட்டு தூக்கிக்கொண்டு செல்லும் காட்சிகள் தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
காணொளி
இவ்வாறு கொள்ளையர்கள் கொள்ளையிடும் சந்தர்ப்பத்தில் பக்தர்களும் ஆலய மதகுமாரும் செய்வதறியாது பார்த்திருக் கொண்டிருந்துள்ளனர்.
இதேவேளை, குறித்த சம்பவம் இடம்பெற்ற போது அங்கிருந்த பக்தர்களும் ஆலய மதகுருமாரும் அதிர்ச்சியடைந்திருந்தமை காணொளிகளில் காணக்கூடியதாக உள்ளது.
