முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியும், தற்போதைய ஜனாதிபதி வேட்பாளருமான டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) அமெரிக்காவின் முன்னணி ஒளிபரப்பு நிறுவனங்களில் 3 விவாத நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அதன்படி, செப்டம்பர் மாதம் 4ஆம் திகதி Fox News இல் முதல் விவாதத்திற்கும், செப்டம்பர் 10ஆம் திகதி NBC, செப்டம்பர் 25ம் திகதி, இரண்டாவது மற்றும் மூன்றாவது விவாதங்களுக்கு தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
பிரசார கூட்டமைப்பு
மேலும் இதற்கு ஒளிபரப்பு நிறுவனங்களின் நிறுவுனர்கள் சம்மதம் தெரிவித்து இருப்பதாகவும், இருப்பினும் நாங்கள் அதை உறுதிப்படுத்தவில்லை என்று அறிவித்துள்ளார்.
அத்துடன் கமலா ஹாரிஸின் பிரசார கூட்டமைப்பின் சம்மதம் மற்றும் தயார் நிலை குறித்து அறிய ட்ரம்ப் காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மூன்று விவாதங்களும் எங்கு நடைபெறும், பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்களா என்பது குறித்து விவரங்களை ட்ரம்ப் வழங்கவில்லை.
இந்த விவாத நிகழ்வானது ட்ரம்ப் மற்றும் ஜோ பைடன் இடையில் நிர்ணயிக்கப்பட்ட விவாத திட்டமிடல் ஆகும், ஆனால் ஜோ பைடன் தேர்தலில் இருந்து விலகியதை தொடர்ந்து இந்த விவாத நிகழ்ச்சி திட்டம் கலைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.