Home உலகம் சர்ச்சைகளுக்கு மத்தியில் ஜனாதிபதியாகும் டொனால்ட் ட்ரம்ப்

சர்ச்சைகளுக்கு மத்தியில் ஜனாதிபதியாகும் டொனால்ட் ட்ரம்ப்

0

அமெரிக்காவில் (United States) இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) வெற்றி பெற்றமையை உறுதி செய்து , அவருக்கான அதிகாரப்பூர்வ வெற்றிச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு நேற்றைய தினம் (06.01.2025) அமெரிக்க நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்காவில் கடந்த வருடம் நவம்பர் மாதம் ஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் உள்ளிட்டவர்கள் போட்டியிட்ட நிலையில் ட்ரம்ப் வெற்றி பெற்றார்.

வெற்றிச் சான்றிதழ்

இந்த நிலையில், அவருக்கான அதிகாரப்பூர்வ வெற்றிச் சான்றிதழ் அமெரிக்கப் நாடாளுமன்றத்தால் வழங்கப்பட்டுள்ளது.

செனட் வாக்குகள் நேற்று கடைசி முறையாக எண்ணப்பட்டன. அதனைத் தொடர்ந்து, முடிவுகள் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, 312 வாக்குகளைப் பெற்று டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றிருப்பதாகவும் , அமெரிக்காவின் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் 226 வாக்குகளைப் பெற்றிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கமலா ஹரிஸ்

டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றதற்கு எதிராக எவ்வித எதிர்ப்பும் ஆட்சேபனையும் தெரிவிக்கப்படாததால், டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றதாக கமலா ஹாரிஸ் அதிகாரபூர்வமாக நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

இந்நிலையில், எதிர்வரும் 20-ஆம் திகதி டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version