Home இலங்கை அரசியல் அநுர – மோடி சந்திப்பு : மீண்டும் கேள்விக்குறியாக்கப்பட்ட தமிழர்களுக்கான தீர்வு

அநுர – மோடி சந்திப்பு : மீண்டும் கேள்விக்குறியாக்கப்பட்ட தமிழர்களுக்கான தீர்வு

0

அநுரவின் இந்திய பயணத்தினுடாகவும் மற்றும் இந்திய பிரதமருடனான சந்திப்பின் ஊடாகவும் தமிழ் மக்களுக்கு எதாவது தீர்வு கிடைக்கும் என தமிழ் மக்கள் எதிர்பார்ப்பார்களாக இருந்தால் அது தவறான விடயம் என அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்ணம் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “மோடியுடனான சந்திப்பில் தமிழ் மக்களின் விவகாரமும் கிடப்பில் போடப்பட்ட ஒன்றாக உள்ளது.

அத்தோடு, அநுர குமார திஸாநாயக்க, மோடி முன்னிலையில் தமிழ் மக்களின் விவகாரம் குறித்து எதையும் வெளிப்படையாக கதைக்கவில்லை.

காரணம், அவர்களை பொறுத்தவரையில் தமிழ் மக்களின் விவாகரம் என்பது அவர்களுக்கு முதன்மையான விடயமாக தென்படவில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தியாவுடனான இலங்கையில் உறவு, சர்வதேச நாடுகளுடனான ஒப்பந்தம், சர்வதேச நாடுகளின் தலையீடு, தமிழ் மக்கள் மீதான சர்வதேச நாடுகளின் எதிர்ப்பார்ப்பு மற்றும் அடுத்த கட்ட அரசியல் நகர்வு என்பவை தொடர்பில் அவர் தெரிவித்த விரிவான கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய ஊடறுப்பு,

https://www.youtube.com/embed/-22HlDn9dWg?start=1187

NO COMMENTS

Exit mobile version