Home சினிமா விஜய் மகன்னு சொல்லாதீங்க.. ஜேசன் சஞ்சய்னு சொல்லுங்க! – ஷாக் ஆன செய்தியாளர்

விஜய் மகன்னு சொல்லாதீங்க.. ஜேசன் சஞ்சய்னு சொல்லுங்க! – ஷாக் ஆன செய்தியாளர்

0

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக தற்போது இருந்து வருகிறார். அவரது படம் பாக்ஸ் ஆபிசில் மிகப்பெரிய வசூலை குவிக்கிறது. இருப்பினும் அவர் சினிமாவுக்கு விரைவில் டாட்டா காட்ட போகிறார். முழு நேர அரசியலில் இறங்குவதால் இந்த முடிவை அறிவித்து உள்ளார்.

மறுபுறம் அவரது மகன் ஜேசன் சஞ்சய் அமெரிக்காவில் சினிமா பற்றிய படிப்பை முடித்துவிட்டு தற்போது கோலிவுட்டில் அறிமுகம் ஆக இருக்கிறார்.

லைகா நிறுவனம் தயாரிப்பில் அவர் ஒரு படம் இயக்கி வருகிறார். அதில் ஹீரோவாக சந்தீப் கிஷன் நடித்து வருகிறார். படம் டிராப் ஆகிவிட்டது என்று கூட சமீபத்தில் செய்திகள் பரவியது. ஆனால் அது உண்மை இல்லை என தற்போது தெரியவந்திருக்கிறது.

திருமணமே செய்ய மாட்டேன்.. சன் டிவி சீரியல் நடிகை அதிர்ச்சி முடிவு

விஜய் மகன்னு சொல்லாதீங்க..

நடிகர் சந்தீப் கிஷன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வந்தபோது அவரிடம் செய்தியாளர்களால் சில கேள்விகளை கேட்டனர்.

“விஜய் மகன் படம்..” என செய்தியாளர் கேள்வி கேட்க தொடங்கியதும், “விஜய் மகன்னு சொல்லாதீங்க, ஜேசன் சஞ்சய் என அவருக்கு பெயர் இருக்கிறது” என கூறினார் சந்தீப் கிஷன்.

“அந்த படம் ஷூட்டிங் தொடங்கி சென்றுகொண்டிருக்கிறது. சூப்பரான ஒரு படமாக அது வரும்” எனவும் அவர் தெரிவித்து உள்ளார். 

NO COMMENTS

Exit mobile version