யாழ். நெடுந்தீவில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளும் வகையில் ஈ.பி.டி.பியின்
தலைவர் டக்ளஸ் தேவானந்தா நெடுந்தீவுக்குக் கடற்படையினரின் படகில் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று(26) அங்கு சென்ற முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா 3 தினங்கள் தங்கி
நின்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார்.
தேர்தல் பிரச்சாரம்
பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்றே கடற்படையினரின் படகில் அவர்
நெடுந்தீவுக்குச் சென்றுள்ளார்.
நெடுந்தீவில் இருந்து நாளைமறுதினமே அவர் யாழ்ப்பாணத்துக்குத் திரும்பவுள்ளார்
என்று தெரிவிக்கப்படுகின்றது.
