சுகாதார மற்றும் ஊடக அமைச்சுக்களின் புதிய செயலாளராக விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க(Anil Jasinghe) நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க, சட்டத்தரணி வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்கவிற்கு இன்று (10) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து கையளித்துள்ளார்.
நியமனம்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் (Anura Kumara Dissanayake) இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.