Home இலங்கை அரசியல் நாடாளுமன்றில் முதல்நாளே சர்ச்சையில் சிக்கிய வைத்தியர் அர்ச்சுனா

நாடாளுமன்றில் முதல்நாளே சர்ச்சையில் சிக்கிய வைத்தியர் அர்ச்சுனா

0

 யாழ்.(jaffna)மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன்(dr.archuna) புதிய நாடாளுமன்றத்தின் முதல் நாள் அமர்வு இன்றையதினம்(21) ஆரம்பமானபோது பாரம்பரியமாக எதிர்க்கட்சித் தலைவருக்கு ஒதுக்கப்பட்ட ஆசனத்தில் அமர்ந்ததுடன் அந்த கதிரையிலிருந்து நகர மறுத்தமை பேசுபொருளாக மாறியுள்ளது.

இலங்கையின் 10 ஆவது நாடாளுமன்றுக்கான கன்னி அமர்வு இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது.இதன்போது முதன்முறையாக நாடாளுமன்ற உறுப்பினரான வைத்தியர் அரச்சுனா எதிர்க்கட்சித் தலைவரின் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

ஆசனத்திலிருந்து நகர மறுத்த அர்ச்சுனா

உடனடியாகவே நாடாளுமன்ற ஊழியர்கள் இது எதிர்க்கிட்சித் தலைவரின் ஆசனம் எனவே அந்த இடத்திலிருந்து நகருமாறு தெரிவித்தபோதும் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றின் முதல்நாள் அமர்வில் ஆசனங்கள் எவருக்கும் ஒதுக்கப்படவில்லை என வைத்தியர் அர்ச்சுனா நாடாளுன்ற ஊழியருக்கு பதிலளித்தார்.

அத்துடன் எதிர்க்கட்சித் தலைவருக்கான ஆசனத்தை அறிவிக்குமாறு கோரிய அவர், அந்த ஆசனத்திலிருந்து நகர மறுத்ததுடன் நாங்கள் நாடாளுமன்ற மரபை மாற்றவே இங்கு வந்துள்ளோம் என தெரிவித்தார். 

NO COMMENTS

Exit mobile version