Home இலங்கை அரசியல் அர்ச்சுனா எம்பியின் நடத்தை தொடர்பான விசாரணை: எடுக்கப்படவுள்ள நடவடிக்கை

அர்ச்சுனா எம்பியின் நடத்தை தொடர்பான விசாரணை: எடுக்கப்படவுள்ள நடவடிக்கை

0

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நடத்தை தொடர்பில் விசாரணை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையை சபையில் சமர்ப்பிக்கப் உள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். 

இராமநாதன் அர்ச்சுனாவின் நடவடிக்கைகள் குறித்து பெறப்பட்ட முறைப்பாடுகளை ஆராய்ந்து அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு, சபாநாயகரால் சிறப்புக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. 

சிறப்பு குழு 

இந்நிலையில், குறித்த குழுவின் ஆய்வு அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார். 

மேலும், இந்தக் குழுவிற்கு துணைக் குழுத் தலைவி ஹேமலி வீரசேகர தலைமை தாங்குவதாகவும், அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் இதில் இடம்பெற்றுள்ளதாகவும் சபாநாயகர் அறிவித்துள்ளார். 

அதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பாதுகாப்பு குறித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு விடுத்த கோரிக்கைகளை பரிசீலித்த சபாநாயகர், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபருக்கு கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version