Home இலங்கை அரசியல் உடனே அனைத்தையும் மாற்ற நினைக்கும் அர்ச்சுனா! அநுர அரசால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள ஏமாற்றம்

உடனே அனைத்தையும் மாற்ற நினைக்கும் அர்ச்சுனா! அநுர அரசால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள ஏமாற்றம்

0

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா(Ramanadhan Archchuna) வைத்தியராக இருந்து நாடாளுமன்றத்திற்குள் வந்திருந்தாலும் நாடாளுமன்றம் தொடர்பான அறிவு அவருக்கு இல்லை என்று பொதுமகன் ஒருவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, நாடளுமன்ற நடைமுறைகள் தெரியாமல், உடனே அனைத்தையும் மாற்றிவிடலாம் என்ற தொனியில் பேசுகிறார்.

ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தில் சென்று அமர்வதெல்லாம் மனிதத் தன்மையுடைய வேலையா எனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இதேவேளை, ஊழலற்ற, கல்விகற்ற சமூகத்தைக் கொண்டு ஆட்சியை அமைப்போம் என்று பெரிய பிம்பத்தைக் காட்டி ஆட்சிக்கு வந்த அநுர அரசாங்கத்தைச் சேர்ந்தவர்களின் கல்வித் தகைமைகள் தற்போது வெளியாகின்றபோது அது பொதுமக்களுக்கு பாரிய ஏமாற்றமாகவுள்ளது எனவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் விரிவாக ஆராய்கிறது லங்காசிறியின் மக்கள் குரல் நிகழ்ச்சி,

NO COMMENTS

Exit mobile version