Home இலங்கை அரசியல் அர்ச்சுனா மற்றும் சபாநாயகரிடையே கடும் முறுகல் – வெடித்த சர்ச்சை

அர்ச்சுனா மற்றும் சபாநாயகரிடையே கடும் முறுகல் – வெடித்த சர்ச்சை

0

நாடாளுமன்ற அடையாள அட்டை தனக்கு 2 மாதங்களாக வழங்கப்படவில்லை என அர்ச்சுனா இராமநாதன் (Archchuna Ramanathan) கடுமையாக சாடினார்.

நாடாளுமன்றத்தில் இன்று (05.02.2025) உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற நிர்வாகத்தினரின் பொறுப்பற்ற செயல் குறித்து தான் வெட்கப்படுவதாகவும் தெரிவித்தார். இதன்போது குறுக்கிட்ட சபாநாயகர் நாடாளுமன்ற அடையாள அட்டை ஏற்கனவே வழங்கப்படடு விட்டதாகவும் அர்ச்சுனா எம்.பி அதனை பெற்றுகொள்ளவில்லை என்றும் தெரிவித்தார்.

இதனையடுத்து மீண்டும் உரையாற்ற ஆரம்பித்த நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, தனக்கு  22 ஆம் திகதியே அடையாள அட்டை வழங்கப்பட்டதாகவும் தான் 20 ஆம் திகதி காவற்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் அர்ச்சுனா எம்.பி தெரிவித்தார்.

தான் அநுராதபுரத்தில் வைத்து இடைமறிக்கப்பட்ட பின்னர், தனக்கும் காவல்துறையினருக்கும் இடையில் நடந்த உரையாடலை காவல்துறையினர் பதிவு செய்து அதனை ஊடகங்களில் வெளியிட்டதாகவும், காவல்துறையினரின் இந்த செயல் வெட்கப்பட வேண்டிய ஒன்றும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற காரணத்தினால் இவ்வாறு காவல்துறையினர் பதிவு செய்து ஊடகங்களில் வெளியிட்டதாகவும் கூறினார். இந்த நாடாளுமன்றம் மற்றும் சபாநாயகர் உள்ளிட்டோர் இது தொடர்பில் வெட்கப்பட வேண்டும் என்றும் சபையில் மீண்டும் மீண்டும் தெரிவித்தார். 

நாட்டில் சட்டம் அனைவருக்கும் பொதுவானது, எனவே அது சாதாரண மனிதர் என்றாலும், எம்.பியாக இருந்தாலும் சட்ட ரீதியான நடவடிக்கைகள் அவ்வாறே பின்பற்றப்படும். இதில் பாகுபாடு இல்லை என அறிவித்ததுடன், அர்ச்சுனா எம்.பி சபையில் கூறிய சில வார்த்தைகள் ஹன்சாட்டில் இருந்து நீக்கப்படும் என்றும் அறிவித்தார். 

https://www.youtube.com/embed/P8l0xGzWhrk

NO COMMENTS

Exit mobile version