Home இலங்கை குற்றம் ஐஸ் போதைப் பொருளுடன் இளைஞன் கைது

ஐஸ் போதைப் பொருளுடன் இளைஞன் கைது

0

கிளிநொச்சியில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கை நேற்று(08) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக வீட்டு வளாகத்தில் சூட்சுமமான முறையில் கைவிடப்பட்ட சாக்கு ஒன்றில்
மறைத்து வைக்கப்பட்டிருந்த 31 கிராம் 300 மில்லி கிராம் ஐஸ் போதைப்
பொருளுடனேயே குறித்த  இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது
செய்யப்பட்ட இளைஞன் இன்றைய தினம் (09) கிளிநொச்சி நீதிமன்றத்தில்
முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version