Home இலங்கை அரசியல் டக்ளஸை தேடிச் சென்ற சி.வி.கே சிவஞானம் – ஏற்க முடியாது: அரியநேத்திரன் கடும் சீற்றம்

டக்ளஸை தேடிச் சென்ற சி.வி.கே சிவஞானம் – ஏற்க முடியாது: அரியநேத்திரன் கடும் சீற்றம்

0

சி.வி.கே சிவஞானம் (C. V. K. Sivagnanam), டக்ளஸ் தேவானந்தாவுடன் (Douglas Devananda) சென்றமையை ஏற்றுக்கொள்ள முடியாது என மட்டக்களப்பு (Batticaloa) மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் (
P. Ariyanethiran) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில், கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “ஏனைய கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைப்பு என்பது தொடர்பில் முன்னாதாகவே கலந்துரையாடப்பட்டது.

இருப்பினும், சி.வி.கே சிவஞானம், டக்ளஸ் தேவானந்தாவுடன் சென்றது என்பது எங்களால் ஏற்றுகொள்ள முடியாது.

அவர் யாழில் ஆட்சி அமைப்பதற்காகவே டக்ளஸ் தேவானந்தாவுடன் இணைந்த நிலையில், அதற்கு பதிலாக தமிழ் தேசிய கட்சிகளுடன் அவர் இணைந்து இருக்காலாம்” என அவர் தெரிவித்துள்ளார்.   

மேலும், தமிழரசுக் கட்சியின் அடுத்த கட்டம், குறித்த கூட்டணி, தமிழ் அரசியல் களம், உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைத்தல் என்பவை தொடர்பில் அவர் தெரிவித்த விரிவான கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய ஊடறுப்பு,


https://www.youtube.com/embed/QJRr4h_xOJI

NO COMMENTS

Exit mobile version