Home இலங்கை அரசியல் சற்று முன்னர் சிஐடியில் முன்னிலையான முன்னாள் எம்.பி கம்மன்பில

சற்று முன்னர் சிஐடியில் முன்னிலையான முன்னாள் எம்.பி கம்மன்பில

0

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில (Udaya Gammanpila) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்று (09) காலை வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக முன்னிலையாகியதாக குறிப்பிடப்படுகின்றது.

கொள்கலன் விடுவிப்பு விவகாரம்

இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர மற்றும் முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில ஆகியோர் பொய்யான தகவல்களை பரப்பியமைக்காக விரைவில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அழைக்கப்படுவார்கள் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார (Harshana Nanayakkara)  அண்மையில் (04.06.2025) நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

அதற்கமைய தயாசிறி ஜயசேகர கடந்த 04 மற்றும் 06ஆம் திகதி ஆகிய இரு நாட்கள் 323 கொள்கலன்களை விடுவித்தது தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/S81qYeEc96c

NO COMMENTS

Exit mobile version