Home இலங்கை அரசியல் அநுரவின் கட்சியில் சிக்கிய போதைப்பொருள் கடத்தல்காரரின் உறவினர்

அநுரவின் கட்சியில் சிக்கிய போதைப்பொருள் கடத்தல்காரரின் உறவினர்

0

அனுராதபுரம் பகுதியில் ஹெரொயினுடன் கைது செய்யப்பட்ட அதிபரின் மனைவி, தேசிய மக்கள் கட்சியின் பேலியகொட நகரசபை உறுப்பினருமான டிஸ்னா நெரஞ்சலா என்பவர், பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும் குற்றவாளியுமான கொஸ்கொட சுஜியின் உறவினர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், ஹெரொயினுடன் கைது செய்யப்பட்ட அதிபரின் சொத்துக்கள் குறித்தும் விசாரணை நடத்தப்படும் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தேசிய மக்கள் கட்சியின் பேலியகொட நகரசபை உறுப்பினர் டிஸ்னா நெரஞ்சலவின் கணவர் நேற்று (05) கைது செய்யப்பட்டார்.

இதற்கிடையில், கடந்த 29ஆம் திகதி, அனுராதபுரத்தின் இபலோகம பகுதியில் ஹெரொயினுடன் ஒரு இளைஞன் இபலோகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது, அவரைப் பார்க்க வந்த நண்பர் ஒருவரிடம், தனது வீட்டில் ஒரு ஹெரோயின் பொட்டலம் இருப்பதாகவும், அதை வீட்டிற்கு அருகிலுள்ள குளத்திற்கு அருகில் மறைத்து வைக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

அந்தப் பொட்டலத்தில் 2 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான ஒரு கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் இருப்பதால், நண்பர் அதைத் திருடிச் செல்ல வாய்ப்புள்ளதாகச் சந்தேகநபர் தனது தந்தையிடம் கூறியதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு நாட்டில் இடம்பெற்ற பல முக்கியமான அரசியல், சமூக, பொருளாதார செய்திகளை உள்ளடக்கிய லங்காசிறியின் விசேட செய்தி தொகுப்பு இதோ….

NO COMMENTS

Exit mobile version