Home இலங்கை குற்றம் மாலைத்தீவில் சிக்கிய போதைப்பொருள் கப்பல்: அவசரமாக பயணமாகும் சிறப்புக்குழு

மாலைத்தீவில் சிக்கிய போதைப்பொருள் கப்பல்: அவசரமாக பயணமாகும் சிறப்புக்குழு

0

மாலைத்தீவு பாதுகாப்புப் படையினரால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் கொண்டு செல்லப்பட்ட மீன்பிடி படகு மற்றும் அதன் மீனவர்கள் குறித்து விசாரிக்க இலங்கை பாதுகாப்புப் படையினரின் சிறப்புக் குழு மாலைத்தீவுக்குச் சென்றுள்ளது.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகள் மற்றும் கடற்படை அதிகாரிகள் அடங்கிய குழு இவ்வாறு மாலைத்தீவுக்குச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை வழியாக இயங்கும் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கை குறித்து இலங்கைப் பாதுகாப்புப் படையினர் வழங்கிய புலனாய்வுத் தகவலின் அடிப்படையில், மாலைத்தீவு பாதுகாப்புப் படையினர் ஒரு மீன்பிடிப் படகு மற்றும் போதைப்பொருள் கொண்டு செல்லப்பட்ட ஆறு மீனவர்களைக் கைது செய்துள்ளனர்.

போதைப்பொருள் இருப்பு 

குறித்த கப்பல் தற்போது மாலைத்தீவுக்குக் கொண்டு வரப்படுவதாகக் கூறப்படுகிறது.

அதன்படி, கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் இருப்பு மற்றும் மீனவர்கள் குறித்து விசாரிக்க இலங்கை குழு ஏற்கனவே மாலைத்தீவுக்குச் சென்றுள்ளதாக பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலதிக தகவல்- அமல்

NO COMMENTS

Exit mobile version