தேசிய மக்கள் சக்தி கட்சியின் முன்னாள் நகரசபை உறுப்பினர் ஒருவரின் கணவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அரசாங்கம் மௌனம் காப்பது தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால வெளிப்படுத்தியுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி கட்சியின் பேலியகொட நகரசபை உறுப்பினரின் கணவர் மற்றும் மகன் போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவ்விடயம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பதிலளித்திருந்தார்.
கட்சி பேதமில்லை
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,
“நாங்கள் ஒரு போதும் மௌனம் காக்கவில்லை. கட்சி பேதமின்றி சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
தேசிய பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குற்றக் கும்பல்களுக்கு இடையே தான் இவ்வாறு கொலை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
போதைப்பொருள் மற்றும் பாதாள உலக நடவடிக்கைகளை ஒடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
[9ZCVOHA
]
