Home முக்கியச் செய்திகள் பெண் ஜனாதிபதியிடம் அரசியல் கூட்டத்தில் அத்துமீறிய நபரால் அதிர்ச்சி

பெண் ஜனாதிபதியிடம் அரசியல் கூட்டத்தில் அத்துமீறிய நபரால் அதிர்ச்சி

0

மெக்சிகோ ஜனாதிபதியிடம் போதையில் நபரொருவர் அத்துமீற முயன்றுள்ளார்.

தலைநகர் மெக்சிகோ சிட்டியில் சாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த சாலையில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் ஜனாதிபதி உரையாற்றி கொண்டிருந்துள்ளார்.

காணொளி 

அப்போது அங்கிருந்த போதையில் இருந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், ஜனாதிபதியிடம் அத்துமீற முயன்றுள்ளார்.

இதையடுத்து, ஜனாதிபதி சிரித்தபடி அங்கிருந்து நகர்ந்துள்ளார்.

இதன்பின்பு, பாதுகாவலர்கள் அந்த நபரை அங்கிருந்து அகற்றியதுடன் இது குறித்த காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

அத்துமீறல் 

இது தொடர்பாக ஜனாதிபதி கருத்து தெரிவிக்கையில், “பெண் என்ற ரீதியில் எனக்கு ஏற்பட்ட அத்துமீறல் தொடர்பாக குற்றச்சாட்டுகளை பதிவு செய்வேன்.

இதுபோன்ற அத்துமீறல்களை முன்னரும் சந்தித்துள்ளேன், படிக்கும் போதும் எதிர்கொண்டுள்ளேன்.

இது என் மீதான தாக்குதல் மட்டுமல்ல ஒட்டு மொத்த பெண்கள் மீதான தாக்குதல்” என அவர் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version