Home இலங்கை அரசியல் அம்பாறை மாவட்டத்தில் களமிறங்கும் சங்கு சின்ன வேட்பாளர்கள்

அம்பாறை மாவட்டத்தில் களமிறங்கும் சங்கு சின்ன வேட்பாளர்கள்

0

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் (DTNA) சங்கு சின்னத்தில் போட்டியிடும் அம்பாறை (Ampara) மாவட்ட வேட்பாளர்களின் அறிமுகக் கூட்டமொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கூட்டமானது, நேற்றையதினம் (16) காரைதீவு கலாசார
மண்டபத்தில் இடம் பெற்றுள்ளது.

கூட்டணியில் அங்கம் வகிக்கும் ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப், புளட், ஈரோஸ் ஜனநாயக முன்னணி ,ஜனநாயக போராளிகள் அமைப்பு
ஆகிய கட்சிகளின் அம்பாறை மாவட்ட தலைவர்கள் ,முக்கியஸ்த்தர்கள், ஆதரவாளர்கள் என
பலர் கலந்து கொண்டுள்ளனர்.

வேட்பாளர்கள்

அம்பாறை இணைப்பாளர் கென்றி மகேந்திரன் தலைமையில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் வேட்பாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டதுடன், வேட்பாளர்கள் கட்சி முக்கியஸ்த்தர்களின் உரைகளும் இடம் பெற்றன.

இதன் படி, அறிமுகப்படுத்தப்பட்ட அம்பாறை மாவட்ட வேட்பாளர்களுக்கும், அவர்களது இலக்கங்களும் பின்வருமாறு…


இலக்கம் 01 கதிர்காமத்தம்பி வேலுப்பிள்ளை

இலக்கம் 02 கிருஸ்ணபிள்ளை லிங்கேஸ்வரன்

இலக்கம் 03 தியாகராசா கார்த்திக்

இலக்கம் 04 பாலசுந்தரம் பரமேஸ்வரன்

இலக்கம் 05 ராஜகுமார் பிரகாஜ்

இலக்கம் 06 சபாபதி நேசராசா

இலக்கம் 07 சிந்தாத்துரை துரைசிங்கம்

இலக்கம் 08 சுப்ரமணியம் தவமணி

இலக்கம் 09 செல்லத்தம்பி
புகனேஸ்வரி

இலக்கம் 10 சோமசுந்தரம் புஸ்ப்பராசா.

NO COMMENTS

Exit mobile version