Home இலங்கை சமூகம் தேசிய அடையாள அட்டையில் விரைவில் புதிய மாற்றம்..!

தேசிய அடையாள அட்டையில் விரைவில் புதிய மாற்றம்..!

0

எதிர்வரும் 2026ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் மின்னணு தேசிய அடையாள அட்டை (e-NIC)  வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

தற்போதைய அடையாள அட்டை

மின்னணு தேசிய அடையாள அட்டை அமைப்பை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டு, தேசிய அடையாள அட்டையை டிஜிட்டல் மயமாக்கும் திட்டம் கடந்த 2012ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. 

அந்தவகையில், தற்போது பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் அடையாள அட்டைகள் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என தெரிவிக்கப்படுகின்றது. 

இதன் காரணமாக, டிஜிட்டல் அடையாள அட்டை அமைப்புக்குச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் எரங்க வீரரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version