கொழும்பு, ஹல்ஃப்ஸ்டோர்ப் நீதிவான் நீதிமன்றில் நடந்த கொலை குறித்து
புலனாய்வுப் பிரிவுகளுக்கு முன்கூட்டியே தகவல் கிடைத்திருந்ததாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டார, இன்று(21) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதலுக்குத் தயாராகி வந்த சிங்கபுர தேவகே இஷாரா செவ்வந்தி என்ற
பெண் பற்றிய தகவல்களைப் புலனாய்வுப் பிரிவு வழங்கியிருந்தது என்று அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
தேசிய பாதுகாப்பு நிபுணர்கள்
இந்தநிலையில், தேசிய பாதுகாப்பு நிபுணர்கள் எதுவும் செய்யவில்லையா என்று அவர்
கேள்வி எழுப்பியுள்ளார்.
