தமிழ் மக்கள் இந்த நாட்டில் அனுபவித்து துன்பங்களுக்கு தீர்வாக இம்முறை தமிழ்
பொதுவேட்பாளருக்கு வாக்களிக்கவேண்டும் எனவும் அது தமிழர்களின் தலையாய
கடமையெனவும் கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியத்தின் தலைவர் சிவஸ்ரீ கணேச
லோகநாதன் குருக்கள் தெரிவித்துள்ளார்.
கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியம் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்
பொதுவேட்பாளர் அரியநேத்திரனை ஆதரிக்கும் வகையில் எடுத்த தீர்மானத்தினை
அறிவிக்கும் வகையிலான ஊடக சந்திப்பு மட்டக்களப்பு, நாவற்குடாவில் உள்ள
ஒன்றியத்தின் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
ஜனாதிபதித் தேர்தல்
இதன்போது கருத்து தெரிவித்த ஒன்றியத்தின் தலைவர்,
“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டுக் கொண்டிருக்கின்ற எமது தமிழ்
பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனை ஆதரித்து இன்று எமது அலுவலகத்தில்
நாங்கள் இந்த ஊடக சந்திப்பை நடத்துவதற்கு முன்வந்துள்ளோம்.
நமது இந்த இலங்கை திரு நாட்டிலேயே எமது மக்கள் இதுவரை காலமும் பெரும்பான்மை இன
சிங்கள ஜனாதிபதிகளினால் இதுவரை காலமும் நாங்கள் பல்வேறு பட்ட ஆதரவை
வழங்கியிருந்தோம். ஏமாற்றம்
மாத்திரமே அன்றி வேறு எதுவும் நமக்கு கிடைக்கவில்லை.
இன்று எமது மக்கள் ஆண்டாண்டு காலமாக தொடர்ந்து வந்த ஆட்சியாளர்களினால் எமது
இனம் மிகவும் மோசமாக வஞ்சிக்கப்பட்டது. தமிழர்கள் மிகவும் கேவலமாக
நடத்தப்பட்டார்கள். எமது இனம் கொன்றொழிக்கப்பட்டது.
இவை அனைத்தையும் இதுவரை
காலமும் நாங்கள் அனுபவித்து வந்திருக்கின்றோம்.
அதற்கு ஒரு தீர்வாக இம்முறை
ஜனாதிபதித் தேர்தலில் பொதுச் சபையின் ஊடாக நாங்கள் இந்த தமிழர் பொதுச் சபையிலே
எமது கிழக்கிலங்கை இந்து குருமார் ஒன்றியம் அங்கத்தவர்கள் ஆக இருக்கின்றோம்.
அதன் மூலம் இந்த பொது கட்டமைப்பினால் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில்
போட்டியிடுகின்ற அரியநேத்திரன் அவர்களை ஆதரிக்க வேண்டும்.
ஏனென்றால் அது தமிழர்களுடைய தலையாய கடமை ஆகும்.” என அவர் தெரிவித்துள்ளார்.