Home அமெரிக்கா ட்ரம்ப்பின் பெயர் கொண்ட தொப்பியை அணிந்த பைடன்

ட்ரம்ப்பின் பெயர் கொண்ட தொப்பியை அணிந்த பைடன்

0

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் பெயர் கொண்ட தொப்பியை தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன், 9/11 தாக்குதல் நினைவேந்தல் நிகழ்வொன்றில் வைத்து அணிந்துள்ளார்.

9/11 தாக்குதலின் போது, தீயணைப்பு வீரர்களாக செயற்பட்ட வீரர்கள் சிலரை பென்சில்வேனியாவில் வைத்து சந்தித்து உரையாடும் போதே அவர் குறித்த தொப்பியை அணிந்துள்ளார்.

நிகழ்வில் கலந்துகொண்ட பைடன், ட்ரம்ப்பின் ஆதரவாளரான தீயணைப்பு வீரர் ஒருவருடன் கலந்துரையாடும் போது, அவர் அணிந்திருந்த ட்ரம்ப்பின் பெயர் கொண்ட தொப்பியை எடுத்து அணிந்து அவரை மகிழ்வித்துள்ளார்.

நகைச்சுவையான தொனி

9/11 தாக்குதல் நினைவேந்தலினை முன்னிட்டு ஒற்றுமையை குறிக்கும் விதமாக அவர் இந்த செயலை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதன்போது பைடன், ட்ரம்ப்பின் ஆதரவாளருடன் மிகவும் நட்பான மற்றும் நகைச்சுவையான தொனியில் கலந்துரையாடியதை அவதானிக்க முடிந்தது.

உங்கள் பெயரை உங்களுக்கு நியாபகம் இருக்கிறதா என ட்ரம்ப்பின் ஆதரவாளர் கேட்ட கேள்விக்கு இல்லை எனக்கு என் பெயர் நியாபகமில்லை என பைடன் பதிலளித்தார்.

வேண்டுகோள்

இதனையடுத்து, குறித்த நபர் உங்களுக்கு வயதாகி விட்டது என பைடனிடம் கூற ஆம், நான் வயதானவன் தான், உங்களுக்கு அதனை பற்றி நிறைய தெரிந்திருக்கிறது என தெரிவித்திருந்தார்.

இதன் பின்னர், ட்ரம்ப் ஆதரவாளரின் வேண்டுகோளுக்கு இணங்க பைடன் தொப்பியை அணிந்துக் கொண்டார். தொடர்ந்து இப்போது உங்களை நினைத்து தான் பெருமைப்படுவதாக தீயணைப்பு வீரர் கூறினார்.

NO COMMENTS

Exit mobile version