Home இலங்கை சமூகம் நீதியை ஒருபோதும் மறைத்து வைக்க முடியாது: பேராயர் மல்கம் ரஞ்சித் சுட்டிக்காட்டு

நீதியை ஒருபோதும் மறைத்து வைக்க முடியாது: பேராயர் மல்கம் ரஞ்சித் சுட்டிக்காட்டு

0

நீதியை ஒருபோதும் மறைத்து வைக்க முடியாது எனவும், உயிர்த்த ஞாயிறு தினத்
தாக்குதலின்(Easter attack) பின்னணியில் உள்ள அனைத்து உண்மைகளையும் கண்டறிய சுதந்திரமானதும்,
நியாயமானதுமான விசாரணையை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் எனவும் பேராயர் (Cardinal Malcolm Ranjith)தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் இன்றுடன் 5 வருடங்கள்
நிறைவடைந்துள்ளதையொட்டி கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில்
இன்று (21.04.2024) விசேட ஆராதனை நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பேராயர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் 5 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி
கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் நேற்று (20) மாலை விசேட
ஆராதனை நடைபெற்றுள்ளது.

இந்த ஆராதனையின் பின்னர் அருட்தந்தைமார்கள், தாக்குதலில் உயிரிழந்தவர்களின்
குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கத்தோலிக்கச் சமூகத்தினர் மேற்கொண்ட நடைபயணம்
புனித அந்தோனியார் தேவாலயத்திலிருந்து கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியார் தேவாலயத்தை
நோக்கி இன்று காலை 7.30 மணியளவில் சென்றடைந்திருந்தது.

இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலில் உயிரிந்தவர்களை நினைவுகூர்ந்து
நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து தேவாலயங்களிலும் இன்று காலை 8.45 மணி முதல்
இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, சகல தேவாலயங்களிலும் மணி ஒலிக்கவிடப்பட்டதைத் தொடர்ந்து மௌன அஞ்சலி
செலுத்தப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினமன்று கத்தோலிக்க
தேவாலயங்கள் மற்றும் சுற்றுலா விடுதிகள் உட்பட 8 இடங்களில் நடத்தப்பட்ட
தாக்குதல்களில் 300 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் 400 இற்கும்
மேற்பட்டோர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பொலிஸாருக்கு எதிராக நீதிமன்றத்தை நாடவுள்ள விஜயதாச ராஜபக்‌ச

பாலஸ்தீன் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல்: 14 பேர் பலி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW   

NO COMMENTS

Exit mobile version