Home முக்கியச் செய்திகள் ஆசிரியர் பற்றாக்குறை : வெளியான அறிவிப்பு

ஆசிரியர் பற்றாக்குறை : வெளியான அறிவிப்பு

0

நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளில் மொத்தமாக 40,000 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

மேல், கிழக்கு, வடமத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுவதாகத் தெரிவித்தார்.

சுற்றுலாப் பயணிகளிடம் மோசடிகளில் ஈடுபடுவோருக்கு எச்சரிக்கை

நாடளாவிய ரீதியில்

இதன்படி, மேல் மாகாணத்தில் ஏறக்குறைய 7,000 ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. கிழக்கு மாகாணத்தில் கிட்டத்தட்ட 3,800 பேரும், வடமத்திய மாகாணத்தில் 3,698 பேரும் தென் மாகாணத்தில் 3,100 பேரும் மற்றும் மத்திய மாகாணத்தில் கிட்டத்தட்ட 6,200 பேரும் பற்றாக்குறையாக உள்ளனர்.

அரசு செலவினங்களை மிச்சப்படுத்த ஆசிரியர் நியமனத்தை வேண்டுமென்றே தாமதப்படுத்துகிறது என ஸ்டாலின் கூறினார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் 5 ஆண்டுகள் நிறைவு!

பாடசாலைகளில் நெருக்கடியான சூழ்நிலை

“தற்போது உள்ள வெற்றிடங்களை நிரப்பாமல் விட்டால், இப்பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் நெருக்கடியான சூழ்நிலை ஏற்படும்.

“இருப்பினும், அரசாங்கம் மேல் மாகாணத்திற்கு 2,500 ஆசிரியர்களை இரண்டு முறை பணியமர்த்தியது, ஆனால் அவர்கள் முறையாக ஆட்சேர்ப்பு செய்யப்படவில்லை. அடுத்த வாரம் பாடசாலைகள் தொடங்கினாலும், சில பாடசாலைகளில் ஆசிரியர்கள் இல்லை”

எனவே, தற்போதுள்ள ஆசிரியர் வெற்றிடங்களுக்கு உரிய முறையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்றார் ஸ்டாலின். 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

NO COMMENTS

Exit mobile version