Home இலங்கை அரசியல் ஈஸ்டர் தாக்குதல்! அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுர பிறப்பித்துள்ள உத்தரவு

ஈஸ்டர் தாக்குதல்! அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுர பிறப்பித்துள்ள உத்தரவு

0

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை தொடர்பில் தேவையான சட்ட ரீதியான நடவடிக்கைகளை முன்னெடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உத்தரவிட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மக்கள் வழங்கிய ஆணை

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

எமக்கு மக்கள் வழங்கியுள்ள ஆணையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணையும் ஒரு முக்கிய பகுதி. இது இலங்கை மனசாட்சியின் பிரச்சினையாகும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகளுக்கு சட்டப்படி தண்டனை பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும்.

அவர்கள் 300 அப்பாவி கிறிஸ்தவ மக்களை படுகொலை செய்திருக்கின்றார்கள். இல்லாவிடில் அது இதயத்தில் ஓட்டையுள்ளது போன்று அமையும். அதனால் அந்த ஓட்டையை அடைப்பது இன்றியமையாததாகும்.

அதேநேரம் அந்த தாக்குதலால் நாட்டில், அநீதிக்கும், ஒதுக்கத்திற்கும், பாதிப்புக்கும் இந்த நாட்டு முஸ்லிம் சமூகத்தினர் பெரிதும் உள்ளாகினர்.

இந்த தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகளை வெளிப்படுத்துவதும் அவர்களுக்கு சட்டப்படி தண்டனை பெற்றுக் கொடுப்பதும் கூட நாட்டின் எந்தவொரு அரசாங்கமும் தவிர்த்துக் கொள்ள முடியாத பொறுப்பேயாகும்.

இருப்பினும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவிக்கு வந்ததும் இவை அனைத்தையும் ஸதம்பிக்கச் செய்தார். ஆனால் எமது ஜனாதிபதி உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை தொடர்பில் தேவையான சட்ட ரீதியான நடவடிக்கைகளை முன்னெடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version