Home இலங்கை அரசியல் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் அவசர அவசரமாக மைத்திரி எடுத்த முடிவு

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் அவசர அவசரமாக மைத்திரி எடுத்த முடிவு

0

2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்றதற்கு அடுத்த மாதத்திலேயே இலங்கை, அமெரிக்காவின் சோஃபா (status of forces agreement (SOFA)) ஒப்பந்தத்தில் இருந்து முற்றாக வெளியேறியது. 

இது அந்த காலப்பகுதியில் ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கை. 

2019 – ஏப்ரல் 21ஆம் திகதி நாட்டில் பல இடங்களில் குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்பட்டு, ஐந்து நாட்களுக்குள் கொழும்பு பத்திரிகைகளில் ஒரு முக்கிய செய்தி வெளியாகியிருந்தது. 

அமெரிக்காவுடன் புதிய படைத்துறை உடன்பாடுகளை மேற்கொள்ள மாட்டோம் என்ற செய்தி, அப்போது ஜனாதிபதியாக இருந்த மைத்திரபால சிறிசேனவினால் தெரிவிக்கப்பட்டதாக அந்த செய்தி வெளியானது. 

இந்நிலையில், அமெரிக்காவின் சோஃபா உடன்படிக்கை எட்டப்படவிருந்த நேரத்தில் தான் இந்த ஈஸ்டர் குண்டு வெடிப்புக்கள் இடம்பெற்றுள்ளமை தெளிவாக தெரிகின்றது என பிரித்தானியாவில் உள்ள இராணுவ ஆய்வாளர் அருஸ் குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பில் அவர் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் குறிப்பிடுகையில், 

NO COMMENTS

Exit mobile version