ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை, ஊடகவியலாளர் பிரதிப் எக்னெலிகொட படுகொலை உட்பட பல்வேறு படுகொலைச் சம்பவங்களின் முக்கியசாட்சி ஒருவர் சிறிலங்காவின் புதிய ஜனாதிபதியிடம் அடைக்கலம் கோரிய சம்பவம் இன்று நடைபெற்றுள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற பல்வேறு மனிதஉரிமை மீறல் சம்பவங்களின் முக்கிய நேரடிச் சாட்சியான அவர் மீதான கொலை முயற்சிகள் நடைபெறுவதாகக் குற்றம்சுமத்திய அவர், இன்று ஊடகங்கள் முன்னிலையில் பகிரங்கமாக பல சம்பவங்களை வெளிப்படுத்தியிருந்தார்.(அவரது சாட்சி இணைக்கப்பட்டுள்ளது)
உண்மையிலேயே அணுர அரசாங்கத்திற்கு இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான அக்கறையோ அல்லது ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சூத்திரதாரிகளை அடையாளம் கண்டுகொள்ளும் எண்ணம் இருந்தால், இந்த முக்கிய நேரடிச் சாட்சியின் உயிரைப் பாதுகாத்து, அவருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
https://www.youtube.com/embed/V167vCvazds