Home இலங்கை அரசியல் ஈஸ்டர் தாக்குதலுக்கு நிதியளித்த ஜே.வி.பியின் முக்கிய உறுப்பினர்…!

ஈஸ்டர் தாக்குதலுக்கு நிதியளித்த ஜே.வி.பியின் முக்கிய உறுப்பினர்…!

0

2015ஆம் ஆண்டில் ஜே.வி.பி தேசிய பட்டியலில் இருந்த இப்ராஹிமே ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கு நிதியளித்ததாக மொட்டு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் நேற்றைய(09.07.2025) அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணையை கையாளும் இரண்டு அதிகாரிகளும் தாக்குதல் நடக்க முன்னர் வந்த 90 முன்னறிவிப்புகளை புறக்கணித்தவர்கள் ஆவர்.

பத்திரிகையாளர் சந்திப்புகள்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்ட ஆணையம் இந்த இரண்டு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்துள்ளது.

தற்போது பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவும், உளவுத்துறைத் தலைவராகவும் இருக்கும் இந்த இரண்டு அதிகாரிகளில் ஒருவர், பெலவத்தையில் உள்ள ஜே.வி.பி தலைமையகத்திற்குள் நுழைந்து பத்திரிகையாளர் சந்திப்புகளை நடத்தினார்” எனத் தெரிவித்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version