Home இலங்கை அரசியல் கம்மன்பிலவின் அறிக்கை விவகாரம் அரசியல் நாடகம்: பகிரங்கப்படுத்தப்படும் குற்றச்சாட்டு

கம்மன்பிலவின் அறிக்கை விவகாரம் அரசியல் நாடகம்: பகிரங்கப்படுத்தப்படும் குற்றச்சாட்டு

0

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் புதிய அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தி வரும் உதய கம்மன்பில நாடக அரசியலை நடத்துவதாக இரத்தினபுரி மாவட்ட சர்வஜன பலய கட்சியின் வேட்பாளர் சமீர பிரசனக சோமரத்ன குற்றம் சுமத்தியுள்ளார்.

சர்வஜன பலய கட்சியில் இருந்து விலகுவது தொடர்பில் இரத்தினபுரியில் நேற்று(31.10.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

மேலும், கட்சியன் தலைவர், திலித் ஜயவீர மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் வேறுபட்ட அரசியல் நிகழ்ச்சி நிரலில் செயற்படுவதால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக கட்சியில் இருந்து விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்

இதன்படி, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக ஷானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன உள்ளிட்ட புதிய அரசாங்கத்தின் மீது உதய கம்மன்பில குற்றம் சுமத்தி வருகிறார்.

எனினும் அதே குற்றச்சாட்டுடன் தொடர்புடைய தேசபந்து தென்னகோன், பூஜித ஜயசுந்தர தொடர்பில் மௌன கொள்கையை உதய கம்மன்பில கடைபிடிப்பதாகவும் அவர் குறிப்பிடுள்ளார்.

அண்மையில் தனியார் ஊடகம் ஒன்றில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் சர்வஜன பலய அரசியல் கட்சியின் தலைவர் திலித் ஜயவீர, கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டுவருவதற்காக மேற்கொள்ளப்பட்ட இனவாத வேலைத்திட்டம் குறித்து பெருமையடித்தமை, வெட்கப்பட வேண்டிய விடயம் எனவும் சமீர பிரசனக குறிப்பிட்டுள்ளார்.

எனவே இதுபோன்ற கட்சியுடன் இணைந்து அரசியல் செய்வது அருவருப்பானது என்றும், கூறியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version