Home இலங்கை அரசியல் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – அம்பலமாகப்போகும் முக்கிய தகவல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – அம்பலமாகப்போகும் முக்கிய தகவல்

0

பிரதி பாதுகாப்பு அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் போது, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் இதுவரை வெளிப்படுத்தப்படாத பல விடயங்கள் நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தப்படுமென ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் (Mujibur Rahman) தெரிவித்துள்ளார். 

நம்பிக்கையில்லா தீர்மானம் எதிர்வரும் திங்கட்கிழமை சபாநாயகரிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சபாநாயகரிடம் கோரிக்கை 

இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு இரண்டு நாட்கள் அவகாசம் கோரியுள்ளதாகவும், இந்த விவாதத்தை விரைவில் நடத்துமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் முஜிபுர் ரஹ்மான் கூறினார்.

அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும், இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் கையெழுத்திட்டுள்ளதாகவும், எதிர்க்கட்சிகளில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் ஏற்கனவே இதில் மிகுந்த ஆர்வத்துடன் பணியாற்றி வருவதாகவும் குறிப்பிட்டார். 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து அரசாங்கம் நியாயமான விசாரணையை நடத்த வேண்டுமானால், பிரதி பாதுகாப்பு அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்படுவது அவசியம் என்றும் முஜிபுர் ரஹ்மான் மேலும் கூறினார்.

NO COMMENTS

Exit mobile version