Home இலங்கை அரசியல் அடிபணிய மாட்டோம்..! கம்மன்பிலவுக்கு அநுர அரசு அதிரடி பதிலடி

அடிபணிய மாட்டோம்..! கம்மன்பிலவுக்கு அநுர அரசு அதிரடி பதிலடி

0

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்னவையும் ஷானி அபேசேகரவையும் எக்காரணத்துக்காகவும் பணி நீக்கம் செய்ய மாட்டோம் என அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் (Vijitha Herath) தெரிவித்துள்ளார்.

அத்துடன், பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பிலவின் (Udaya Gammanpila) நோக்கங்களுக்கு எங்களால் அடிபணிய முடியாது என்று அமைச்சரவை பேச்சாளர்  குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயாக்க எந்த தவறும் செய்ய வில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பதவியில் இருந்து நீக்க வேண்டும்

இந்நிலையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பிரதான குற்றவாளிகளில் ஒருவராக குறிப்பிடப்பட்டுள்ள ரவி செனவிரத்னவை பொது பாதுகாப்பு அமைச்சின் பதவியில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என உதய கம்மன்பில (Udaya Gammanpila) எச்சரித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைக் குழுவின் அறிக்கைகளை வெளியிடுவதற்காக கொழும்பில் நேற்று (21) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அமைச்சரவை பேச்சாளர் பதிலளிக்கையிலேயே, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் சாகல ரத்னாயக்கவின் தனிப்பட்ட தேவைக்காக நியமிக்கப்பட்ட ஏ. என். ஜே. தி அல்விஸ் அறிக்கையை எங்களால் ஏற்று கொள்ளவும் முடியாது என்றும் எவரையும்
பணி நீக்கம் செய்ய மாட்டோம் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவம் தொடர்பிலான விசாரணை அறிக்கையை உதய கம்மன்பில மறைத்து வைத்திருந்தமை தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

[OS5CWFS
]

NO COMMENTS

Exit mobile version