கிழக்கு மாகாண ஆளுநருக்கும் உலக வங்கியின் பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலானது இன்று (28) திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றுள்ளது.
கலந்துரையாடல்
இந்த சந்திப்பில், கிழக்கு மாகாணத்தில் பொருளாதார மேம்பாட்டிற்காக உலக
வங்கியால் செயல்படுத்தப்படக்கூடிய சாத்தியமான திட்டப் பகுதிகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இதில் சுற்றுலாத் துறை , விவசாயம், கடற்றொழில் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தினை மேம்படுத்தல் குறித்து முக்கியமாக மேலும்
விரிவாக பேசப்பட்டது.
