Home இலங்கை சமூகம் சுகாதார அமைச்சின் மீளாய்வுக் கூட்டத்தில் கிழக்கு ஆளுநர் பங்கேற்பு!

சுகாதார அமைச்சின் மீளாய்வுக் கூட்டத்தில் கிழக்கு ஆளுநர் பங்கேற்பு!

0

Courtesy: H A Roshan

கிழக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு, சமூக சேவைகள், கிராமிய மின்சார அமைச்சின் மீளாய்வுக் கூட்டத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர (Jayantha Lal) பங்கேற்றுள்ளார். 

குறித்த கூட்டமானது, நேற்று (01.09.2024) சுகாதார அமைச்சின் பதில் செயலாளர் எந்திரி என்.சிவலிங்கம் தலைமையில் சுகாதார அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

முக்கிய செயற்றிட்டங்கள் 

இதன்போது, சுகாதார, சுதேச மருத்துவ நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு, சமூக சேவைகள், கிராமிய மின்சார அமைச்சினால் இவ்வருடம் முன்னெடுக்கப்பட்ட மற்றும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற செயற்றிட்டங்கள் தொடர்பிலும், அமைச்சின் கீழுள்ள திணைக்களங்களினால் மேற்கொள்ளப்பட்ட மற்றும் மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆளுநர் கேட்டறிந்து கொண்டுள்ளார்.

மேலும், அது தொடர்பான விளக்கங்களை அமைச்சின் பதில் செயலாளர் எந்திரி என்.சிவலிங்கம் மற்றும் திணைக்கள தலைவர்களினால் முன்வைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ்.ரத்நாயக்க, ஆளுநர் செயலக செயலாளர் எல்.பி.மதநாயக்க, பிரதிப் பிரதம செயலாளர் (நிதி) ஏ.எம்.எம்.றபிக், பிரதிப் பிரதம செயலாளர் (திட்டமிடல்) என்.தமிழ்ச்செல்வன், கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்தியர் எம்.ஏ.நபீல், சுகாதார அமைச்சின் நிருவாக உத்தியோகத்தர் எஸ்.எம்.றியாஸ் உள்ளிட்ட உயரதிகாரிகள் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பணிப்பாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version