Home உலகம் நேருக்கு நேர் சண்டையில் திணறிய இஸ்ரேல்: வெற்றியை கொண்டாடும் ஹிஸ்புல்லா

நேருக்கு நேர் சண்டையில் திணறிய இஸ்ரேல்: வெற்றியை கொண்டாடும் ஹிஸ்புல்லா

0

லெபனான் (lebanon) எல்லையில் ஹிஸ்புல்லா அமைப்பினருடன் நேருக்கு நேர் நடந்த சண்டையில் இஸ்ரேலிய வீரர்கள் தோல்வியடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த வாரம் இஸ்ரேல் (Israel) லெபனானில் வரையறுக்கப்பட்ட தரைவழி தாக்குதல்களை மேற்கொள்வதாக அறிவித்து, லெபனானின் முக்கிய பகுதிகளில் வான்வழி தாக்குதல்களை நடத்தியது.

குறித்த தாக்குதல் இஸ்ரேலிய படை நுழையக் கூடிய இடங்களான ஒடெய்சா மற்றும் கெஃபார் கிலா ஆகிய இடங்களில் ஹிஸ்புல்லா போராளிகளை அழிப்பதற்காக நடத்தப்பட்டது.

முதல் சண்டை

இதனையடுத்து, இஸ்ரேலிய வீரர்கள் அந்த பகுதிகளின் ஊடாக நுழைந்து முன்பு சென்றதைவிட சற்று முன்னேறியுள்ளனர், ஆனால் அங்கு அவர்கள் பதுங்கியிருந்த ஹிஸ்புல்லா போராளிகளால் மோசமாக எதிர்கொள்ளப்பட்டு பின்வாங்கியுள்ளனர்.

இதுவே எதிர் குழுவினருடன்  நேருக்கு நேர் நடந்த முதல் சண்டை ஆகும், எனினும் இதில் இஸ்ரேல் தோல்வியடைந்துள்ளது.

ஹிஸ்புல்லா வெற்றி 

இந்த நிலையில், ஹிஸ்புல்லா அமைப்பு இதனை தங்களது படைகளின் வெற்றி என்று குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பாதுகாப்பு அமைச்சர் யோவ் காலன்ட் மற்றும் ஆயுதப்படைகளின் தலைவர் ஹெர்சி ஹலேவி உள்ளிட்ட பாதுகாப்புத் தலைவர்களுடன் ஒரு சந்திப்பை நடத்தியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version