Home சினிமா லப்பர் பந்து ஹிட்.. இயக்குனருக்கு காஸ்ட்லி கிப்ட் கொடுத்த ஹரிஷ் கல்யாண்

லப்பர் பந்து ஹிட்.. இயக்குனருக்கு காஸ்ட்லி கிப்ட் கொடுத்த ஹரிஷ் கல்யாண்

0

இரண்டு வாரங்களுக்கு முன்பு ரிலீஸ் ஆன படம் லப்பர் பந்து. அதில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் உள்ளிட்டோர் நடித்து இருந்தனர்.

தமிழரசன் பச்சமுத்து இயக்கிய அந்த படத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்த் பற்றிய ரெபரென்ஸ், பாடல் போன்றவை இருந்தது பலரது கவனத்தையும் ஈர்த்தது.

படம் ஹிட்.. ஹரிஷ் கல்யாண் செயின் கிப்ட்

லப்பர் பந்து படம் தற்போது பாக்ஸ் ஆபிசில் நல்ல வசூலை குவித்து ஹிட் ஆகி இருக்கிறது.

இந்நிலையில் நடிகர் ஹரிஷ் கல்யாண் தற்போது 3 பவுன் தங்கசெயினை வாங்கி இயக்குனர் தமிழரசனுக்கு கிப்ட் ஆக கொடுத்திருக்கிறார்.

அதன் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

Source: https://cineulagam.com/article/harish-kalyan-gold-chain-to-lubber-pandhu-director-1727884914

NO COMMENTS

Exit mobile version