கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகரவினால் கிழக்கு
மாகாண அரச சேவை ஆணைக்குழுவின் புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள்
நியமிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்கள் இன்று(18.10.2024) ஆளுநரால்
வழங்கப்பட்டுள்ளன.
புதிய ஆணைக்குழு
இதன்போது, புதிய ஆணைக்குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற முன்னாள் திருகோணமலை மாவட்ட செயலாளர் பி.எச்.என். ஜெயவிக்ரம நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக ஓய்வு பெற்ற முன்னாள் திருகோணமலை மேலதிக மாவட்டச் செயலாளர் கே. அருந்தவராஜா, ஓய்வு பெற்ற முன்னாள் அம்பாறை பிரதேச செயலாளர் ஜி.எல்.ஆரியதாச மாயா, ஓய்வு பெற்ற பாடசாலை ஆசிரியர் எஸ். ஹமீத் ரிபாஹிதீன் மற்றும் , பாதுகாப்பு அமைச்சின் உதவி வெடிபொருட்கள் கட்டுப்பாட்டாளர் எஸ். முகமது இக்ரிமா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, புதிய ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு வாழ்த்து தெரிவித்த
ஆளுநர், அவர்கள் சுதந்திரமாக செயற்படுவதற்கு சகல அதிகாரங்களும் வழங்கப்பட்டு
அரசியல் தலையீடுகள் இன்றி தமது சேவைகளை ஆற்றக்கூடிய சூழலை உருவாக்குவதாக
தெரிவித்துள்ளார்.
