Home இலங்கை சமூகம் கிழக்கிற்கான தொடருந்து சேவை பாதிப்பு : புனரமைப்பு பணிகள் தீவிரம்

கிழக்கிற்கான தொடருந்து சேவை பாதிப்பு : புனரமைப்பு பணிகள் தீவிரம்

0

கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட வெள்ளத்தினால் கிழக்கு மாகாணத்திற்கான தொடருந்து சேவை பாதிக்கப்பட்ட நிலையில் புனரமைப்பு பணிகள்
தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான தொடருந்து சேவைகள் கடந்த மாதம் 25 ஆம் திகதி முதல் இன்று வரை (18.12.2028) 24 நாட்களாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் மன்னம்பிட்டி தொடக்கம் மட்டக்களப்பு வரையிலான வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட தொடருந்து பாதையை இனங்கண்டு அவற்றை தொடர்ச்சியாக புனரமைப்பு செய்யும் பணிகள்
முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கிழக்கு மாகாண மக்கள் பாதிப்பு 

இந்த தொடருந்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதால் கிழக்கு மாகாண மக்கள் பெரிதும்
பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரச ஊழியர்களுக்கான தூரப் பிரயாணங்கள், தபால் பொதிகள்
எடுத்து வரும் சேவைகள் மற்றும் எரிபொருள் சேவைகள்
சரக்கு தொடருந்து சேவைகள் என்பனவும் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன் மட்டக்களப்பு தொடருந்துநிலைய முச்சக்கர வண்டி சாரதிகளும் தங்கள் வாழ்வாதாரத்தை
இழந்து காணப்படுகின்றதுடன் மக்கள் தொடர்ச்சியாக தொடருந்து நிலையத்திற்கு வந்து
ஏமாற்றத்துடன் செல்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version