வாகனங்களை காவிச்செல்லும் கனரக வாகனம் ஒன்று இன்று (18.12.2025) அதிகாலை வீதியோரம் இருந்த தொலைத்தொடர்பு இணைப்புக் கம்பத்துடன் மோதி
விபத்துக்குள்ளாகிள்ளது.
அதன்படி, விபத்துக்குள்ளான வாகனம் அருகிலிருந்த விவசாய நிலத்துக்குள் பாய்ந்துள்ளது.
யாழ் நகரிலிருந்து பருத்தித்துறைக்கு “மோட்டார் சைக்கிள்” களை ஏற்றிச் சென்ற
கனரக காவு வாகனமே குறித்த விபத்தில் சிக்கியுள்ளது.
விசாரணை ஆரம்பம்
இன்று அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றதாக கூறப்படும் குறித்த விபத்தின் போது
குறித்த வாகனம் மற்றும் தொலைத்தொடர்பு இணைப்புக் கம்பம் பலத்த சேதங்களுக்குள்ளான
போதும் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என அச்சுவேலிப் காவல்துறையினர் தெரிவித்தனர்.
குறித்த விபத்து வேகக்கட்டுப்பாட்டை இழந்து ஏற்பட்டதா அல்லது சாரதியின்
நித்திரை தூக்கத்தால் ஏற்பட்டதா என்ற போர்வையில் அச்சுவேலி காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
