Home இலங்கை அரசியல் குட்டி தேர்தலுக்கு பிள்ளையானும் – வியாழேந்திரனும் கூட்டு

குட்டி தேர்தலுக்கு பிள்ளையானும் – வியாழேந்திரனும் கூட்டு

0

நாடாளுமன்ற தேர்தலில் பின்னடைவை தொடர்ந்து உள்ளூராட்சி தேர்தலில் களமிறங்குவதற்காக புதிய முயற்சியொன்றை பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் மேற்கொண்டுள்ளார்.

அதன்படி, பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தலைமையிலான முற்போக்கு தமிழர் கழகத்தினரும் இடையிலான உத்தியோகபூர்வ புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று சைச்சாத்திடப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு இன்று (15) மட்டக்களப்பு ரிவேரா விடுதியில் இடம் பெற்றுள்ளது.

அதன்போது, பலமிக்க அரசியல் சக்தி ஒன்றினை கட்டமைக்கும் முயற்சியில் ‘கிழக்கு தமிழர் கூட்டமைப்பு’ எனும் புதிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  

https://www.youtube.com/embed/k1Ysqgkc2Ho

NO COMMENTS

Exit mobile version