Home இலங்கை கல்வி சத்தியாக்கிரக போராட்டத்தில் குதித்துள்ள கிழக்குப் பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள்

சத்தியாக்கிரக போராட்டத்தில் குதித்துள்ள கிழக்குப் பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள்

0

மட்டக்களப்பு – வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் இன்று முதல் தொடர் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கிழக்கு பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் தங்களின்,
மாதாந்த இழப்பீட்டுத் தொகையை அதிகரி, பயனுள்ள ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்து பல்கலைக்கழக சமூகத்திற்கு பொது காப்புறுதி முறைமையை நடைமுறைப்படுத்தி, ஏற்றுக் கொள்ளப்பட்ட 107% சம்பளம் அதிகரிப்பை பல்கலைக்கழக ஊழியர்களுக்கு வழங்கு போன்ற
கோரிக்கைகளை முன்வைத்து வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழக வளாகத்தின் முன்பாக கொட்டகை அமைத்து சத்தியாகிரக போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.

இது குறித்து கருத்து தெரிவித்த போராட்டகாரர்கள்,

சத்தியாகிரக போராட்டம்

நாங்கள் இன்று “சத்தியாகிரக போராட்டத்தை ஆரம்பித்துள்ளோம்.
எமது கோரிக்கைகள் 6 வருடமாக இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

கோரிக்கை வெற்றி பெறும்வரை எமது போராட்டம் இடம்பெறும்.

அரசாங்கம் ஒரு கருத்து அமைச்சர் ஒரு கருத்து இராஜாங்க அமைச்சர் ஒரு கருத்து குழுக்களையும் அமைத்து கருத்துக்களை முன்வைக்கின்றனர்.

ஆனால் எமக்கு தீர்வு இல்லை.

ஜனாதிபதி இதை கருத்தில் கொள்ள வேண்டும்.

ஏனைய உயர் பதவிகளில் உள்ளவர்களுக்கு சம்பளம் வழங்க பணம் உள்ளது.

எமக்கு வழங்க பணம் இல்லை என்று சாட்டு சொல்கின்றனர். இதே வருடத்தில்தான் அவர்களுக்கு சம்பளம் வழங்கியுள்ளனர்” என தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version