நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் (29) சுகயீன விடுமுறை போராட்டத்தினை மேற்கொள்ள பொருளாதார அபிவிருத்தி சங்கம் தீர்மானித்துள்ளது.
குறித்த போராட்டத்திற்காக 11 பிரதேச செயலகங்களின் 320 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் விடுமுறை
எடுக்க உள்ளதாக திருகோணமலை மாவட்ட பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவர் பரமேஸ்வரன் லோஜினி தெரிவித்துள்ளார்.
பெண் பொலிஸ் உத்தியோகத்தரைத் தாக்கிய சக பொலிஸ் அதிகாரி கைது
முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள்
அந்த வகையில் பின்வரும் கோரிக்கைகளை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் முன்வைத்துள்ளனர்,
1.பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தினுடைய நிர்வாகச் செலவில் மூன்றில் ஒரு
பகுதி அதிகரிக்கப்பட வேண்டும்.
2.பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு நிரந்தர போக்குவரத்து
கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டும்.
3. பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு அலுவலக கொடுப்பனவுகள் 3000
ரூபாவாக வழங்கப்பட வேண்டும்.
4.பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு நிரந்தர அலுவலக உபகரணங்கள்
அதற்கான கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டும்.
இலங்கைக்கு கடத்த முயன்ற பெருமளவான போதைப்பொருள் மீட்பு
இலங்கையில் சீதை அம்மனை பிரதிஷ்டை செய்வதற்கு உத்தரபிரதேஷில் இருந்து வரும் புனிதநீர்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |