நாட்டின் உண்மையான சமூக, பொருளாதார மற்றும் அரசியல் மாற்றங்கள் 10-15 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் என துணை அமைச்சர் டி.பி. சரத் தெரிவித்துள்ளார்.
விழாக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் விருப்பத்தாலும் ஜனநாயக வாக்குகளாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த அரசாங்கம், அடுத்த ஐந்து, பத்து ஆண்டுகளுக்கு மட்டுமல்லாமல் நீண்ட காலத்திற்கு நாட்டை ஆட்சி செய்யும் என்று அவர் இதன்போது கூறியுள்ளார்.
இருண்ட யுகத்தில் இலங்கை
அத்துடன், நாட்டின் உண்மையான சமூக, பொருளாதார மற்றும் அரசியல் மாற்றங்கள் 10-15 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் எனவும் அது இப்போது தான் ஆரம்பித்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், உலகம் முழுவதும் பாரிய சமூக, தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப புரட்சிகள் நடந்தபோது, இலங்கை 76 ஆண்டுகளாக இருண்ட யுகத்தில் வைக்கப்பட்டது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
