பொதுத் தேர்தலை நடத்துவதனால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடையாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பொருளாதார நிலைமையை கருத்தில் கொள்ளாது அரசாங்கம் பொதுத் தேர்தலை நடத்துவதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
எனினும், நாட்டில் பொதுத் தேர்தலை நடத்துவதன் ஊடாக பொருளாதாரம் சரிவடைய போவதில்லை என ஜனாதிபதியின் பொருளாதார மற்றும் நிதி விவகாரங்களுக்கான சிரேஸ்ட ஆலோசகர் பேராசிரியர் அணில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
தேர்தல் இன்றியமையாதது
நாட்டின் பொருளாதாரத்திற்கு தேர்தல் மூலம் பாதிப்பு ஏற்படும் என்ற குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் ஜனநாயகத்தை நிலை நாட்டுவதற்கு பொது தேர்தலையும் நடத்த வேண்டியது இன்றியமையாதது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்தி பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாதக விளைவுகள் இல்லை
பொது தேர்தல் நடத்துவதனால் பொருளாதாரத்திற்கு பாதக விளைவுகள் ஏற்பட போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கு ஏற்கனவே பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.